ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை பாராளுமன்ற சந்திப்பில் பங்கேற்க சபாநாயகர் பெல்ஜியம் விஜயம்

இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர ஆகியோர், இம் மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸுக்கு விஜயம் செய்து, 2026ஆம் ஆண்டுக்கான 12 ஆவது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கைப் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சந்திப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், பல இருதரப்பு சந்திப்புகளிலும் பங்கேற்றனர்.

12 ஆவது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கைப் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சந்திப்பு, இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான தூதுக்குழுவின் தலைவர் சேர்பன் டிமெத்ரி ஸ்டேட்சா ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.

இச்சந்திப்பு இம் மாதம் 15 ஆம் திகதி பிரஸ்ஸல்ஸில் நிறைவடைந்தது.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, பெல்ஜியம், லக்ஸம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் மாண்புமிகு சந்தன வீரசேன மற்றும் பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இலங்கைத் தூதுக்குழுவில் அங்கம் வகித்தனர்.

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றம் அமைக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கைப் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சந்திப்பு என்ற வகையில், இச்சந்திப்பு இரு தரப்பினருக்கும் இடையிலான பாராளுமன்ற உறவுகளில் முக்கிய மைல்கல்லாக அமைந்ததுடன், ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இரு தரப்பினரினதும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects