இந்திய அரசின் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் இலங்கையின் 75 வருட ஆண்டு கால இராஜதந்திர உறவை முன்னிட்டு ‘இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்’ எனும் தொனிப்பொருளில் கடந்த மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வேண்டுகோளுக்கு அமைவாக 750 உலர் உணவுப் பொதிகள் மாவட்ட செயலத்திற்கு வந்தடைந்துள்ளது.
இவ் உலர் உணவு பொதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஸ், கணக்காளர் எம்.வினோத் மற்றும் பலர் கலந்து கொன்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇