அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 16 பேர் உயிரிழந்ததாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தைச் செலுத்தும் போது வீதி விதிகளை மீறிச் செயற்பட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண வீதிகளில் பயணிக்கும் வேகத்துக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வேகத்துக்கும் இடையே பாரியளவு வேறுபாடுகள் உள்ளன.
இதனால் சிறியளவான தவறுகளும் பாரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇