சூரியனின் கொரோனல் பகுதியில் இருந்து வெளியான ஆற்றலின் தாக்கத்தை ஆதித்யா விண்கலம் கண்டறிந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வடிவமைத்து கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி அதனை விண்ணில் செலுத்தியது.
இது 127 நாட்கள் பயணித்து பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீற்றர் தொலைவில் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் திகதி நிலைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் வெளியான ஆற்றலின் நிலையை ஆதித்யா விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரிய புயல்கள் குறித்தும் அதிலுள்ள ஆற்றல் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்கலத்தில் ‘பாபா’ எனும் பிளாஸ்மா பகுப்பாய்வு கருவி பொருத்தப்பட்டிருந்தது.
இந்த கருவி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
‘பாபா’ ஒரே கருவியாக இருந்தாலும் இதில் 2 சென்சார்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவை சூரியக் காற்றின் துகள்களின் அளவு மற்றும் அதன் திசையை அளவிட பயன்படுகின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇