கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புத்தளம் புகையிரத மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான புகையிரத சேவைகள் இன்று (29.12.2025) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டிருந்த புகையிரத மார்க்கத்தின் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, புகையிரத சேவைகள் இவ்வாறு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாத இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, புத்தளம் புகையிரத மார்க்கத்தில் குடாவெவ மற்றும் மாதம்பே புகையிரத நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள கடுபிட்டி ஓயா பாலத்திற்கு அருகில் புகையிரதப் பாதை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. 

இதன் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் / புத்தளம் இடையிலான புகையிரதப் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது. 

இதன் விளைவாக, சிலாபம் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 புகையிரத பெட்டிகளை (Train Sets) போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியாமல் போனதுடன், அந்த மார்க்கத்தின் புகையிரத சேவைகள் நாத்தாண்டியா புகையிரத நிலையம் வரை மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 

கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையே இன்று (29.12.2025) காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படவுள்ள அலுவலக புகையிரதங்கள் பின்வருமாறு:

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects