தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்று (27) மற்றும் மார்ச் 6 ஆம் திகதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, தேர்தலுக்கான பணம் செலவிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
எவ்வாறாயினும், குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒரு தேர்தல் கூட நடத்தப்படாத காரணத்தினால், குறித்த சட்டத்தின் விதிகள் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு உரிய புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இது இடம்பெறவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇