சமுர்த்தி செளபாக்கியா ரன்விமன வீடுகள் கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் மீராவோடையில் 27.02.2024 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டார் .
கோறளைப்பற்று மேற்கு மீராவோடை கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி செளபாக்கியா ரன் விமன வீடுகளை அரசாங்க அதிபர் பயனாளிகளுக்கு உத்தியோக புர்வமாக கையளித்தார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி அனுசரணையிலும் பயனாளியின் நிதி பங்களிப்பிலும் இவ் வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் மாவட்ட செயல பிரதம கணக்காளர் எஸ்.எம்.பஸிர், சிரோஸ்ட சமூர்த்தி முகாமையாளர் மனோகிதராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.