நிலவும் வறட்சியான வானிலையினால் 15 நீர் விநியோக நிலையங்களின் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 6 நீர் விநியோக நிலையங்களில் நேர அட்டவணைக்கமைய நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆரச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கம்பளவத்த, புசல்லாவை, கொட்டகலை, ஹட்டன், ஊருபொக்க ஆகிய பகுதிகளில் நேர அட்டவணைக்கமைய நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது.
வறட்சியான வானிலை நிலவும் இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, நிலவும் வறட்சியான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் குறைவடைந்துள்ளமை மற்றும் பல்வேறு பிரதேசங்களின் தாழ்வு வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகரித்துள்ளமை ஆகியன இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளதாக திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇