மத்தள விமான நிலைய செயற்பாடுகளை தனியார் மயமாக்கும் திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனம் ஒன்று கூட்டாக தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திரா தெரிவித்தார்.

இரு நிறுவனங்களின் நிர்வாகத்துடனும் பல வெற்றிகரமான கலந்துரையாடலைத் தொடர்ந்து உடன்பாடு எட்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய-இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்து இலாபத்தில் ஒரு பங்கை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects