செங்கலடியில் வாழ்வாதாரக் கடனுதவிகள் வழங்கிவைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேச செயலக கிராம அபிவிருத்திப் பிரிவினால்மயிலம்பாவெளி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 16 உறுப்பினர்களுக்கு சுயதொழில் ஊடான வாழ்வாதார மேம்பாட்டிற்காக கடனுதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 28.02.2024 அன்று இடம்பெற்றது .

அதன் பிரகாரம் சங்க நிதியினூடாக ரூபாய் 800,000/- (எட்டு இலட்சம்) சுழலும் கடன் திட்டத்தின் கீழ் இக்கடனுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இக் கொடுப்பனவானது பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் அனுமதி மற்றும் ஆலோசனையின் கீழ் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அகிலேஸ்வரனின் மேற்பார்வையின் கீழ் கிராம அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஸப்ரி ஹசதினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க நிருவாக சபை உறுப்பினர்களும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects