போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் காணி உரிமங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதனின் தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் 28.02.2024 அன்று இடம்பெற்றது.
நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிகுமார், கணக்காளர் தி.அம்பிகாபதி, நிருவாக உத்தியோகத்தர் தி.உமாபதி, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதித்த உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் இருபதாயிரம் அளிப்பு, பூரண அளிப்பு மற்றும் காணி அனுமதிப்பத்திரங்கள் என்பன தேசிய ரீதியில் வழங்கப்பட்டு வரும் நிலையில், போரதீவுப்பற்றில் இடம்பெற்ற காணி உரிமங்கள் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரனின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற இந்நிகழ்வில் 129 காணி உரிமங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் விவேகானந்தபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மீழ் குடியேற்ற அமைச்சினுடாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇