மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 29.02..2024 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சேவை பெறுநர்கள் தொலைபேசி இலக்கங்களில், முதல் மூன்று இலக்கங்களான தங்களுடைய மாவட்ட தொலைபேசி குறியீட்டு இலக்கத்தை முதலாவதாக அழுத்தி பின்னர் 2 117 116 என்ற தொலைபேசி இலக்கத்தையும் சேர்த்து அழைப்பினை ஏற்படுத்துவதன் ஊடாகவும், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாகவும் தங்களுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇