இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதிப்போட்டிக்கான இந்திய டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நேற்று இந்த குழாமை பெயரிட்டுள்ளது.
வேகபந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதுடன், வொசிங்டன் சுந்தர் ரஞ்சிக் கிண்ணத் தொடருக்காக இறுதி டெஸ்ட் போட்டிக்கான குழாமில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், கே.எல் ராகுல் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அணித்தலைவர் ரோஹித் சர்மா தலைமையிலான குழாமில் ஜஸ்ப்ரிட் பும்ரா, யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ராஜட் படிதர், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கே.எஸ் பரத், டேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், முகேஸ் குமார் மற்றும் ஆகாஸ் தீப் ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇