2024 மார்ச் 07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(வளிமண்டலவியல் திணைக்களம்)
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇