சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கவுள்ள மூன்றாவது கடன் தவணைக்கான ஒப்பந்தம் 12.06.2024 அன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் போதுமான முன்னேற்றத்தை இலங்கை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கொசெக் அண்மையில் தெரிவித்திருந்தார்.
வெளி வணிக கடன் வழங்குனர்களுடன் விரைவில் ஒப்பந்தத்திற்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் இலங்கை முக்கியமான நவீனமயப்படுத்தல் பலவற்றை மேற்கொள்ள தவறியுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.எம்.எப் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவுகளுக்கமைய 2024 மே மாத நிறைவில் நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகளில் 25 வீதத்தை நிறைவேற்றுவதில் இலங்கை தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇