அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லாததால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அதன் இணைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.
“அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் அரசாங்கம் வழங்கியுள்ள 5,000 ரூபாய் கொடுப்பனவு. ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய மீதி ரூ.5,000 கொடுப்பனவு எமக்கு போதாது. உழைக்கும் மக்கள் குறைந்தபட்சம் 20,000 ரூபாய் கொடுப்பனவு உயர்வுக்காகவே போராடினார்கள். எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் அரச மற்றும் மாகாண தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடுகின்றன. தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு நியாயமான சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதேவேளை, தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு ஹோட்டல் தொழிலை பராமரிப்பது சிரமமாக உள்ளதாக ஹோட்டல் பணியாளர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தமது தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என அதன் தேசிய அமைப்பாளர் ஜயதிலக்க ரணசிங்க தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇