மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புதிய வாகன உரிமையாளர்களுக்கு எண் தகடுகளை வழங்குவதில் இரண்டு மாத தாமதம் ஏற்படும் என்று   எதிர்பார்க்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவிக்கையில், 

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய வழங்குநர்களிடமிருந்து எண் தகடுகளுக்கான கொள்முதல் கோரிக்கையை சமர்ப்பித்ததால் இத் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் இச் செயல்முறை முடிவடையும் . அதன் பின்பு எண் தகடுகள் வழங்கல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை  உள்ளது. 

அதுவரை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அச்சிடப்பட்ட காகித எண் தகடுகளையும் புதிய வாகன உரிமையாளர்களின் பதிவு விவரங்களை உறுதிப்படுத்தும்  மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து ஒரு கடிதத்தையும் வழங்கி வருகின்றோம். இந் நடவடிக்கை குறித்து  பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரபூர்வ  வழங்குநர் கோரிக்கை கடிதத்தை அனுப்பிய பின்பு அதன் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதால் எண் தகடுகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.- என்றார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects