பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களை பெற புதிய குறுஞ்செய்திச் சேவை அறிமுகம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய குறுஞ்செய்திச் சேவை ஊடாக இத் தகவல்களை பெறலாம் .

இதன் மூலம் 10 பயிர் வகைகளுக்குத் தேவையான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச் சேவையினை 1920 எனும் தொலைபேசி எண்ணை அழைத்து அல்லது KSMS இடைவெளி உங்கள் பெயர் குறிப்பிட்டு பயிர் எண்ணைக் குறிப்பிட்டு 1920 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் நெல் பயிருக்கு எண் 01 உம், மிளகாய் பயிருக்கு எண் 02 உம் , சோளப் பயிருக்கு எண் 03 உம், பெரிய வெங்காயப் பயிருக்கு எண் 04 உம் , உருளைக்கிழங்கிற்கு எண் 05 உம் , புடலங்காய் பயிருக்கு எண் 06 உம் ,கத்தரிக்காய் பயிருக்கு எண் 07 உம் இட முடியும் என்பதுடன் தக்காளி பயிருக்கு எண் 08 உம், பப்பாளி பயிருக்கு எண் 09 உம், வாழைப் பயிருக்கு எண் 10 உம் இட்டு பயிருக்கேற்ற ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects