மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான பேட்மிண்டன் “ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் – 2026 போட்டிகள் மட்டக்களப்பு மாவட்ட பேட்மிண்டன் விளையாட்டு கழகத்தின் தலைவர் வி.பேரின்பராஜா தலைமையில் ரோசாரியோ வீதியில் அமைந்துள்ள கழகத்தின் உட்புற விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட பேட்மிண்டன் சங்கத்துடன் இணைந்து நடத்தும் இப்போட்டிகளில் பிரதேச இளைஞர் யுவதிகள் விளையாட்டு திறன்களை வெளிக்காட்டினர்.
அரசாங்க அதிபர் கருத்து தெரிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட பேட்மிண்டன் கழக உறுப்பினர்களின் விடா முயற்சிகளையும், மாவட்டத்தில் பேட்மிண்டன் விளையாட்டை மேம்படுத்துவதற்கான அவர்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டை பாராட்டினார்.
வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிகேடயம் மற்றும் சான்றிதழ்கள் பிரதம விருந்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
“ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் – 2026” போட்டி, மட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ந்து வரும் பேட்மிண்டன் வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த மேடையாக அமைந்ததுடன் விளையாட்டு ஒற்றுமையையும் போட்டி உணர்வையும் ஊக்குவித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சுற்றுப் போட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் எஸ்.ஶ்ரீ முருகன், பொறியியலாளர் என்.திருவருள் செல்வன் மற்றும் கழக உறுப்பினர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










