பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்னவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் 05.03.2024 அன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்துக்கலந்துரையாடினார்.
வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, மீள்குடியேற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு விடுவிப்பது தொடர்பில் ஆளுநரினால் பாதுகாப்புச் செயலாளரிடம் எடுத்துக்கூறப்பட்டதற்கு அமைவாக, காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாம் பரிந்துரைகளை அனுப்புவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்ன, வடக்கு மாகாண ஆளுநரிடம் இதன்போது உறுதியளித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇