கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனால், சில விசேட கணக்காய்வு நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அரச சேவையில் தற்போதுள்ள பட்டதாரிகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான போட்டிப் பரீட்சை விரைவில் நடத்தப்பட்டு 465 வெற்றிடங்களுக்கான புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇