ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பெளதீகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில் ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கேஸ் முகமதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான மருத்துவம், பெளதீகம், வேதியியல் மற்றும் இலக்கியத் துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.