கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் பூராக கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் அத்தியாவசியமான வீதிகள் இனம் கண்டு அவற்றை செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் 1.3Km நீளமான களுவன்கேணி பாடசாலை வீதி காபெட் வீதியாகவும், 160M நீளமான வந்தாறுமூலை உள்ளக வீதி கொங்கிரீட் வீதியாகவும் செப்பனிட்டு மக்கள் பாவனைக்காக இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வுகளில் களுவன்கேணி ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுரு நிமல்றாஜ் சர்மா, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியாலாளர் எந்திரி ஏ.லிங்கேஸ்வரன், களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அதிபர் விராத்தனன், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஆ.தேவராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலக உத்தியோகத்தர் திருநாவுக்கரசு, ஏறாவூர் பற்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கோணேஸ்வரன் , கிராம மட்ட பிரதிநிதிகள் உட்பட வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇