பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு சரியான இருக்கைகள் கூட இருக்காது. இதுபோன்ற பாடசாலைகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தங்களால் முடிந்தவரை செலவு செய்வார்கள். ஆனால் மலேசியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் வகுப்பறையில் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி அலங்கரித்து உள்ளார்.
கமல் டார்வின் என்ற அந்த ஆசிரியர், தான் கடினமாக சம்பாதித்ததன் மூலம் கிடைத்த போனஸ் பணத்தில் இந்த செயல்களை செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த ஆசிரியரின் செயலை பாராட்டி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇