அரசாங்கம் இறக்குமதி செய்த அரிசியின் முதலாம் தொகுதி எதிர்வரும் 16 ஆம் திகதியளவில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற் கட்டமாக 52,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.
குறித்த அரிசி தொகை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.
நாட்டுக்குக் கொண்டு வரப்படும் அரிசியை விரைவாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் நெல் ஆலை உரிமையாளர்களினால் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசி பொதி, தொகை மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அளவு தொடர்பிலான அறிக்கையைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇