பெரும்போகத்தில் நாடளாவிய ரீதியில் கீரி சம்பா உற்பத்தியை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த பெரும்போகத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2000 ஏக்கரில் கீரி சம்பா செய்கையை மேற்கொள்ளவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பா உற்பத்தி அறுவடை நிகழ்ச்சியின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
சந்தையில் ஏனைய அரிசிகளின் விலை குறைந்து காணப்படும் போதும் கீரி சம்பா அரிசியின் விலை அதிகரித்திருப்பதனால் விதை நெல் உற்பத்தியை அதிகரிப்பதே இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇