அரசாங்கத்தினால் முதியோர்களை கௌரவிக்கும் நோக்கில் தங்களது வீடுகளில் வாழ்வதற்கு தேவையான குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலகங்கள் தோறும் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிற்கான நிகழ்ச்சித் திட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் அவர்களது வழிகாட்டலில் அண்மையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம். ருவைத், , முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.சுல்பிகா மற்றும் சமூக பராமரிப்பு நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அடிப்படைத் தேவைகள் உள்ள முதியோருக்கு உதவி வழங்கும் திட்டம் எனும் நோக்கில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அறுபது வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான கட்டில், மெத்தை, மின்விசிறி போன்ற பொருட்களை கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇