ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (12.08.2024) அறிவித்துள்ளது.
இதன்படி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஜூலை மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக மே மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனையாகச் சமரி அத்தப்பத்து தெரிவாகியிருந்தார்.
இந் நிலையில் ஜூலை மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்காக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்துவுடன், இந்திய மகளிர் அணியின் ஸ்மிருதி மந்தனா மற்றும் செஃபாலி வர்மா ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த தொடர்களில் சமரி அத்தபத்து வெளிப்படுத்திய சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக அவர்குறித்த விருதை தன்வசப்படுத்தியுள்ளார்.
இதேவேளை ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் ஜூலை மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராகத் தெரிவாகியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇