நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு 29.07.2025 அன்று இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்னை அபிவிருத்தி சபையின் பிராந்திய முகாமையாளர் பி.உதயசந்திரன் தலைமையில் மயிலம்பாவெளி தென்னை அபிவிருத்தி சபையின் அலுவலக வளாகத்தில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் கலந்து கொண்டதுடன் தென்னை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பிராந்திய முகாமையாளர் கே.ரவிச்சந்திரன், தென்னை அபிவிருத்தி பிரிவின் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் நிதர்சினி தேவரூபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது தென்னை விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், செய்முறைப் பயிற்சிகள் ஊடாகவும் தெளிவுபடுத்தப்பட்டு, விவசாயிகளுக்கான உரம் வழங்கி வைக்கப்பட்டது.
பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அனுசரனையுடன் நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானிய திட்டத்தின் கீழ் காய்க்கும் மரங்களுக்கான (APM) உரம் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










