அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96-வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
சினிமா துறையில் உலகின் சிறந்த விருதாக ஒஸ்கர் விருது கருதப்படுகிறது.
தற்போது ஒவ்வொரு துறைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சிறந்த சர்வதேச படமாக தி சோன் ஆஃப் இன்ட்ரெஸ்ட் (The Zone of Interest) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் இங்கிலாந்தில் உருவான படம் ஆகும்.
சிறந்த துணை நடிகை விருது- டிவைன் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்ட் ஓவர்ஸ்)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருது- நாடியா ஸ்டேசி, மார்க் கௌலியர், ஜோஷ் வெஸ்டன் (புவர் திங்க்ஸ் )
சிறந்த புரோடக்சன் டிசைன் விருது – புவர் திங்க்ஸ்
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது – ஹோலி வாடிங்டன் (புவர் திங்க்ஸ்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்- த பாங் அண்ட் தி ஹெரான்
சிறந்த திரைக்கதை விருது- ஜஸ்டின் ட்ரீயர் மற்றும் ஆர்தர் ஹராரி (அனாடமி ஆஃப் ஃபால்)
தழுவல் திரைக்கதை விருது- கார்ட் ஜெஃபெர்சன் (அமெரிக்கன் ஃபிக்சன்)
சிறந்த துணை நடிகர் விருது- ராபர்ட் டௌனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇