கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின பிரதான நிகழ்வு சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர்ரின் தலைமையில் 11.03.2024 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில்லும் , கெளரவ அதிதியாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி ரமீசாவும் கலந்து கொண்டதுடன் பிரதான வளவாளராக எழுத்தாளரும் மார்க்க அறிஞருமான ஓட்டமாவடி அரபாத் கலந்து கொண்டு விழிப்புணர்வு சொற்பொழிவை மேற்கொண்டார்.
இதன்போது 04 பெண்களுக்கு சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் 13 பெண்களுக்கு சமுர்த்தி வங்கியினால் வாழ்வாதார கடனும் வழங்கப்பட்டன.
இதன்போது முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்ஏ.மஜீத், வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், திட்டமுகாமையாளர் ஏ.எல்.சரீப், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அரூசியா நியாஸ், சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் உள்ளிட்ட பிரிவுகளிற்கான சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇