சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
இன்று மாலை 4.30 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் இணை செயலாளர் கே.எல்.டி.ஜி.ரிச்மண்ட் தெரிவித்தார்.
“நேற்று நண்பகல் 12 மணியளவில் நாட்டிலுள்ள 17 தேசிய பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணியிலிருந்து விலகினர். இதற்கு முக்கிய காரணம் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் பல்கலைக்கழகங்களில் சம்பளம் குறைப்பு சரி செய்யப்படும் என உறுதியளித்தமையே ஆகும். இதுவரை சரி செய்யப்படவில்லை. அதனால் தான் வேலைநிறுத்தம் நடக்கிறது. இதற்கு அதிகாரிகள்தான் பொறுப்பு. தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் அடுத்த வாரம் முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்” என்றார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇