லண்டனின் Welsh நகரில் Hay-on-Wye பகுதியில் உள்ள மலை உச்சியில் திடீரென ஒரு பிரம்மாண்ட உலோக மோனோலித் (ஒற்றைக்கல் – Monolith) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வௌ்ளி போல் பளபளப்பாக மின்னும் இதனை Hay-on-Wye அருகில் Hay Bluff பகுதியில் நடந்து செல்பவர்கள் கடந்த வார இறுதியில் கண்டுள்ளனர்.
சேற்றுப் பகுதியில் சுமார் 10 அடி உயரத்தில் உள்ள இந்த மோனோலித், திடீரென குறித்த இடத்திற்கு எவ்வாறு வந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த பொருள் பூமிக்கு அப்பாற்பட்டதாக இருக்குமோ, ஏலியன்களின் வேலையாக இருக்குமோ எனவும் பலர் சமூக ஊடகங்களில் சந்தேகங்களை வௌியிட்டுள்ளனர்.
உள்ளூர்வாசியான Craig Muir, நடைபயணத்தின் போது ஒரு வித ”UFO” என்று தான் கருதியதைக் கண்டபோது அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சுமார் 10 அடி உயரம் உள்ள அந்த உலோகம் மாபெரும் Toblerone சொக்லேட் போன்ற வடிவத்தை கொண்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇