லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று மீண்டும் திருத்தப்படவுள்ளது.
இறுதியாக கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டது. இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு தற்போது மூவாயிரத்து 127 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
இதன்படி, 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு தற்போது ஆயிரத்து 256 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 587 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தநிலையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று மீண்டும் திருத்தப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்புக்களை வழங்குவதற்காக லிட்ரோ நிறுவனத்தின் ஊடக சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.