யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த பொன்னையா உதயகுமார் என்பவர் 34 வருடங்களாக முச்சக்கரவண்டி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசு வழங்கும் நோக்கில் சிறிய ரக முச்சக்கரவண்டியை சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார் .
அத்துடன் தனது 3 பிள்ளைகளும் தன்னுடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந் நிலையில், 34 வருட அனுபவத்தை பயன்படுத்தி பேரனின் முதலாவது பிறந்ததினத்திற்கு பரிசாக இந்த முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளதாகவும் பொன்னையா உதயகுமார் குறிப்பிட்டார்.
பேரனின் பெயரையும் பிறந்த திகதியையும் வைத்து இலக்கத்தகடினை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தான் எதிர்பாராமல் தயாரித்த இந்த முச்சக்கரவண்டிக்கு தற்போது வெளிநாடுகளிலும் கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முச்சக்கரவண்டி தற்போது சமூக ஊடகங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇