கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று (04.08.2025) வரலாற்றில் முதல் முறையாக 20,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் கூற்றுப்படி, இன்று (04.08.2025) காலை வர்த்தகத்துக்காக கொழும்பு பங்குச் சந்தை திறக்கப்பட்ட 10 நிமிடங்களுக்குள் இந்த மைல்கல் எட்டப்பட்டது.
அந்த நேரத்தில், பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனை வருவாய் ரூ. 432 மில்லியனைத் தாண்டியதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










