உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின்  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26.03.2026) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

பிரதி அமைச்சர் மார்ஷவின் உள்ளிட்ட ரஷ்ய தூதுக்குழுவினர் இன்று காலை 10:52 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் கொழும்பிலுள்ள ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் ஆகியோர் வரவேற்றனர்.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான உத்தியோகபூர்வ அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம்

தெரிவித்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகளின் ஊடாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, எரிபொருள் விநியோகம் மற்றும் அது சார்ந்த இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இந்த விஜயமானது இலங்கையின் தற்போதைய எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.   

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects