மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கான சுற்றுப் போட்டிகளுக்காக இன்று (04.06.2024) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த அணியில் 15 வீரர்கள் மற்றும் 07 பயிற்சியாளர்கள் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் எதிர்வரும் 15, 18 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதோடு, அந்த போட்டிகள் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இது தவிர மேலும் 03 T20 போட்டிகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் எதிர்வரும் 24, 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK-650 மூலம் துபாயில் இருந்து காலை 08.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியை வரவேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவும் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇