Prime Movers மற்றும் Fork lift இயக்குநர்களுக்கான பயிற்சியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 18-4-2024 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
அம்கோர் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திரு. சிவயோகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்கோர் நிறுவன ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ப. முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜி.பிரணவன் மற்றும் மனித வள உத்தியோகத்தர் கருணாகரன் ஆகியோர் அதிதிகளாகவும், அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள் உட்பட பயிற்சியைப் பூர்த்தி செய்த இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
அம்கோர் நிறுவனத்தின் “சமூகப் பொருளாதார அபிவிருத்தியும் முறையற்ற புலம்பெயர்தலை மட்டுப்படுத்தலும் என்னும் செயற்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியுதவியில், ஹைடெக் லங்கா சர்வதேச தொழிற்கல்வி நிறுவனத்தில் Prime mover மற்றும் Fork lift இயக்குநர்களுக்கான பயிற்சி குருனாகல் மாவட்டத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சியை நிறைவு செய்த மட்டக்களப்பைச்சேர்ந்த 24 இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் இதன்போது அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.
இவ்விளைஞர்களுக்கு மூன்று நாட்கள் வதிவிட தலைமைத்துவப் பயிற்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇