கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணப்படும் வீதிகளை அடையாளப்படுத்தி வரைபடம் தயாரிக்கும் கலந்துரையாடலொன்று பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் மற்றும் சமூர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர், காணி பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்கள உத்தியோகத்தர்
கே.மோகன் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
தியாவட்டவான் கிராம சேகர் பிரிவில் காணப்படும் வீதிகளை அடையாளப்படுத்தி அந்த வீதிகளை பாதுகாத்தலும் அபிவிருத்தி செய்தலும் முன் ஆயத்த நடவடிக்கையாக அந்த வீதிகளுக்கான வரைபடத்தை உருவாக்கி வர்த்தமானியில் வெளியிடுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை இதன்போது மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇