கொழும்பின் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை மாலை 7 மணி முதல் இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் , கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக, குறித்த பகுதிகளில் நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇