மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம் சி.பி.எம் நிறுவன நிதி அனுசரணையில் விசேட தேவையுடையோர் மற்றும் பெண் தலைமை தாங்கும் பெண்களுடன் இணைந்து பிளாஸ்டிக் மாற்றீட்டுப் பொருள்கள் உற்பத்திற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அதனடிப்படையில் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாவனையைக் குறைக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றீடாக வாழை நார் பொருட்களை உற்பத்தி செய்யும் வாழை நாரை பிரித்தெடுக்கும் நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவன தலைவர் தர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்வில் வை.எம்.சி.ஏ நிறுவன பதில் பொது செயலாளர் பெற்றிக், மாகாண சமூக சேவை உத்தியோகத்தர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வை.எம்.சி.ஏ நிறுவன உத்தியோகத்தர்கள், சி.பி.எம் நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇