மட்டக்களப்பு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட “சோல்ட்டட் பொப்கோர்ன்” (Salted Popcorn) எனும் திரைப்படம் 16-03-2024 அன்று கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் திரையிடப்பட்டது.
RNP Entertainment மற்றும் Bad-Dot Studios PVT LTD தயாரிப்பில் ஜெரோஷனின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் LERO Production லெரோஷியனினால் வெளியிடப்பட்டுள்ளது.
பிரேமலக்சன், தர்ஷிகா ஆகியோர் பிரதான பாத்திரங்களிலும், சந்திரகாசன், சத்தியலிங்கம், கௌசன், ஜித்தன், எலினா, நிதுஷா, சஞ்சனா, சம்பத் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களிலும் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கான இசையமைப்பாளர்களாக அன்டன் ரௌஷான் மற்றும் பகீர் மோகன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
சினிமா கனவுகளுடன் வாழும் ஒரு இளைஞன் அவனது வாழ்க்கையில் எப்படியான சவால்களை எதிர்நோக்குகின்றான் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இப்படத்தின் முக்கியமான கதை திரையரங்கமொன்றின் ஒரு பகுதியில் இடம்பெறுவது போன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் PVR, யாழ்ப்பாணத்தில் ராஜா மற்றும் மட்டக்களப்பில் செல்லம் பிறிமியர் ஆகிய திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை பின்வரும் இணைபில் பார்க்கலாம்
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇