தனியார் வாகனங்கள் தவிர்ந்த வாகனங்களுக்கான இறக்குமதி தடைகளை அடுத்த வாரத்திற்குள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 304 HS குறியீடுகளின் கீழ் தனியார் வாகனங்கள் தவிர்ந்த இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என தெரிவித்தார்.
67 HS குறியீடுகளின் கீழ் வர்த்தக வாகனங்கள் மற்றும் 299 HS குறியீடுகளின் கீழ் அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.