2023 (2024) உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி 19.03.2024 அன்று முதல் 29ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 41 நிலையங்களில் நடைமுறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்தியின் அனுமதி அட்டையில் பரீட்சைக்கு தோற்றும் திகதி மற்றும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த திகதி மற்றும் இடம் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇