ஆப்பிள் நிறுவனம் தமது புதிய படைப்பான ஐபோன் 16 சீரிஸை வெளியிட்டுள்ளது.
‘it’s Glow time’ என்ற நிகழ்வின் மூலம் புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஆப்பிள் கைக்கடிகாரம் உள்ளிட்ட பலவற்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2007இல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை அறிமுகம் செய்தது.
அன்று முதல் ஆண்டுதோறும் தமது பயனர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கும் வகையில் புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த முறை AI அம்சங்கள், கெப்சர் பட்டன் (Capture Button) மற்றும் பெரிய திரை கொண்ட கெமரா போன்றவை இதில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇