காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 162ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் எம்.பரீட் எனும் பயனாளியின் வீட்டில் வீட்டுத் தோட்ட அறுவடை விழா உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.சில்மியாவினால் அறுவடை செய்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வறுவடையில் மிளகாய், தக்காளி, மற்றும் பாகற்காய் போன்ற மரக்கறி வகைகள் அறுவடை செய்யப்பட்டன.
இவ்வறுவடை விழாவில் காத்தான்குடி பிரிவு கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇