வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.சமன் தர்மசிறி பத்திரன, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ஸை 24/04/2024 அன்று சந்தித்துக் கலந்துரையாடியதுடன் தமது கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்ற ஆளுநர், கடமைகளை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துக்களையும் கூறினார். அத்துடன் நோயாளர்களின் உரிமைகள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும் என தெரிவித்த ஆளுநர், குறித்த விடயம் தொடர்பில் சுகாதார துறையினர் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் கூறினார். மேலும் மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதாரசேவை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு, ஆளுநர் ஆலோசனைகளை வழங்கினார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇