பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையினால் 2023ம் ஆண்டில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டும் விழா வலயக்கல்வி பணிப்பாளர் சீ. ஸ்ரீதரன் தலைமையில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 27.12.2023 அன்று இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளீதரன் கலந்து கொண்டதோடு மேலும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முன்னால் மட்டக்களப்பு தலைவர் சி.வசந்தராசா, பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவி கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய அதிபர் ஆ.பார்த்தீபன், ஆசிரியர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் .
தொடர்ந்து பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட எழுபது பாடசாலைகளில் கல்வி கற்று பொதுப்பரீட்சைகளில் சாதனை மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், தேசிய மட்டத்தில் சாதனை படைத்தவர்கள் மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொடுத்த ஆசிரியர்களும் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.
இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், கற்றல் மற்றும்இணைப்பாட விதான செயற்பாடுகளில் பல்வேறு சாதனை படைத்த மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இங்கு அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், கையடக்க தொலைபேசியில் நேரத்தை கடத்தாது கல்வியில் தமது நாட்டத்தை செலுத்த வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇