மட்டக்களப்பில் 78 ஆவது சுதந்திர தின வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

78 ஆவது சுதந்திர தின வாரத்தினை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் தலைமையில் திராய்மடு முதியோர் சங்க கட்டிட மண்டபத்தில் 02.02.2026 அன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் திராய்மடு பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் இக் கிராமத்தினை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் முன்பள்ளி கல்வி, சிறுவர் பாதுகாப்பு, போதைப்பொருள் பாவனை மற்றும் பல பிரச்சினைகள் தொடர்பாக இப் பிரதேச மக்களுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இப் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பொதுப்பிரச்சினைகள் தொடர்பாக மேலதிக அரசாங்க அதிபரிடம் முறையிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட சிறுவர் உரிமை அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.மதிராஜ், போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் நிஷா ரியாஸ், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருளாளினி சந்திரசேகரம், குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கான கிராம உத்தியோகத்தர் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பயன்தரு மரங்களும் நடப்பட்டன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects